Tuesday, 20 July 2010

வெட்சிப்பூ



வகையில் வெளியேறும் வாயோடு
சுளித்துக் கொண்டிருந்தன
சுமைகள்.

வருந்தி மோதும்
வாதத்தில்
கருத்த சூரியனின் கண்கள்.

பனியோடு பேசும்
கூர்மை மான்களின்
ஒப்பற்ற சிலேடை.

தாவி வரும்
தாளம் தரும்
தணியாத தகிப்பு.

கொம்போடு அலையும்
சூனியங்களின்
பார்வையற்ற நிலைப்பு.

நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.

கூர்மையற்ற
வெளிச்சங்களோடு
அபாயமாய் அழகு.

புதைந்த வெளிகளில்
புலர்ந்த பன்னீரில் தேம்பும்
இலக்கற்ற விண்ணின் தேம்பல்.

ஆதவனின் நிழல்
கொண்டாடும்
மைய வெறுப்பு.

சுழிய பந்தம் தேடிய
ஒப்பற்ற
கருநிலாக்கள்

பாடிய மௌனம்
பாடா ஓசை
கேளா நீட்சி.

அவையத்து முந்தீர்...

அனைத்தும் நீளின்
கொற்றனின் கூர்நிசி
கொடுவேல் ஆகுமோ?

13 comments:

  1. //நாப்பத்தி ஒம்போது
    நாவுகளின்
    நடனப் பிளவு.//

    இது என்ன கணக்கு!?

    ReplyDelete
  2. வால்,
    கண்டுக்காதீங்க.

    இது பின் சைடு நவீனத்துவக்கவிதை.

    ReplyDelete
  3. என்ன...ஒண்ணுமே புரில.சம்பந்தா சம்பந்தம் இருகிற மாதிரித் தெரில.தலையங்கம் வெட்சிப்பூ.
    வெட்சிப் பூ போரில் வென்ற பிறகு சூடும் மலர்ன்னு நேசன் எனக்குச் சொல்லியிருக்கார்.அப்போ என்ன படம் இது !பின் சைடு நவீனத்துவக் கவிதைன்னும் இருக்கு.நல்லாவே குழப்பணும்ன்னு திட்டப் போட்டு நடத்துறீங்கன்னு நினைக்கிறேன்.
    யார் கூட்டு ?

    தொடங்கி முடிஞ்சிருக்கு கவிதை.வார்த்தைகள் அழகாக் கோர்த்திருக்கீங்க.என்ன சொல்றீங்கன்னுதான் புரியல கொல்லான்.ஆனா நல்ல கவிதை !

    ReplyDelete
  4. கவியரசி ஹேமா...
    சொல்ல வந்தத தெளிவா சொல்லாம, மத்தவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் புரியாம இருக்கறதுக்குப் பேர் தான் 'பின் சைடு நவீனத்துவம்'.
    ஆனாலும், இதை சரியா புரிஞ்சிட்டீங்களே.
    எல்லாம் உங்களைப் பாத்து கவித எழுத வந்ததன் விளைவு {புலிய பாத்து பூனை சூடு போட்ட மாதிரி)

    ஆனாலும், உங்கட நாடு பத்தியது தான் இதன் மையம்.

    நன்றி கவியரசி.

    ReplyDelete
  5. சரி...இப்போ புரிஞ்சு போச்சு.
    ராஜபக்ச குடும்பத்துக்கூட கை கோத்துக்கிட்டீங்க !

    ReplyDelete
  6. ஹேமா,,

    அந்த டி. ஒ. ஜி. கூட நான் ஏன் போயி கை கோக்கப் போறேன்?
    அப்படி ஒரு நிலை வராது. வரின், கரும்புலியாவேன்.
    நினைவிருக்கட்டும்...
    என்னைப் போயி இப்படி நினைச்சிட்டீங்களே.?

    ReplyDelete
  7. அட...சும்மா பகிடிக்குச் சொல்ல
    இப்பிடிக் கோவம் வருது !

    சரி...அப்ப கவிதைக்கு விளக்கம் சொல்லுங்கோ !

    ReplyDelete
  8. //வகையில் சுளித்து
    வெளியேறும் வாயோடு
    கொண்டிருந்தன சுமைகள்


    வருந்தி கருத்த
    வாதத்தில் மோதும்
    சூரியனின் கண்கள்.//

    இது தாங்க அமைப்பியல் வாதம்.......:)

    ReplyDelete
  9. //அமைப்பியல் வாதம்//

    வெங்கடசுப்ரமணியம் சார்,
    அப்படின்னா என்ன?

    ReplyDelete
  10. நாப்பத்தி ஒம்போது
    நாவுகளின்
    நடனப் பிளவு.

    .....??????? வித்தியாசமாக இருக்குதுங்க.

    கூர்மையற்ற
    வெளிச்சங்களோடு
    அபாயமாய் அழகு.

    ...... !!!!!! அழகாய் இருக்குதுங்க....

    ....பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சித்ரா.

    ReplyDelete
  12. பனுவலுக்கு வெளியே அழகும் செய்தியும் இல்லை; அதற்கு உள்ளேதான் இருக்கின்றது என்று அமைப்பியல் கூறுகின்றது; அதேபோல் ஒரு முறை வாசித்தவுடன் கிடைக்கிற பொருள் அதன் பொருள் அல்ல; மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும் அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும் அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணை பனுவலைக் கட்டமைக்கின்றன என்றும் பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகின்றது என்றும் பின்-அமைப்பியல் கூறுகின்றது.

    அதாவது கொல்லான்............ நான் என்ன சொல்லவருகிறேனென்றால்...அதாவது.....சரி ...வேண்டாம் விடுங்கள்.....நானும் எவ்வள்வு தான் காப்பி பேஸ்ட் செய்வது.

    ReplyDelete