Tuesday, 29 June 2010

காதல் வாழிய.


நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே''

என்ற சங்கப்பாடல் உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கலாம்.
சற்றே நினைவிருத்திப்பாருங்கள்.

பரிசில் வேண்டிஅரசனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த - ஓய்வு எடுக்கும் போது இதனை இயற்றிய சத்திமுற்றப்புலவர், தனது காதல் மனைவிக்கு குறுஞ்செய்தியாக, தான் எப்படி இருக்கிறேன் என்பதை நாரை மூலம் தூதாக செய்தி அனுப்புகிறார்.

''
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி''

- அதாவது, மழையில் நனைந்திருக்கும் சுவரில் உள்ள பல்லி, 'ஏதாவது என் காதல் கணவனைப் பற்றிச் சொல்லும் என்று எதிர் பார்த்திருக்கும் எனது மனைவியைக் கண்டு , குளிரில், ஆடை குறைந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே என்றவாறு நானிருக்கிறேன் என்று
சொல்லு.' என்கின்றார்.

இதே சூழலில் நான் முன்பொரு சமயம் இருந்து, பின் வீடு திரும்பி என் காதல் மனையாளைக் கண்டபின் அவள், என்னிடம் ஊடல் கொண்டாள்.

போன காரியம் முடியலியே (அவருக்கு முடிந்தது) , எப்படி என் காதல் மனையாளைக் கண் கொண்டு பார்ப்பது என்றெண்ணி, ஓர் ஓரம் அமர்ந்து (அவள் பெயரிட்டழைத்து) 'ஒரு தேனீர் கொடம்மா ' என்றேன்.

அவளுக்கும் தெரியும், இவன் எதுவும் கொணரவில்லையென.

கொணர்ந்திருந்தால், கூடிக் கொஞ்சியிருப்பேன் எனத் தெரியும்.

ஆனாலும் கொணர்ந்தாள்.

கொண்டு வந்து வைத்தாள்.

'நங்கென்று' உச்சி வானம் என் தலை மீது வந்து வீழும் ஓசை போல்.

அதிலும் தெரிந்தது, என் காதல் மனைவியின் ''காதல்"

காதல் வாழிய.

11 comments:

  1. அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சங்கப் பாடல் !
    ஒரு குவளைக் கருப்புத் தேநீர் !
    காதல் !
    கொல்லாமை !

    ReplyDelete
  3. மதுரை சரவணன்,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ஹேமா,
    //சங்கப் பாடல் !
    ஒரு குவளைக் கருப்புத் தேநீர் !
    காதல் !
    கொல்லாமை !//

    முதல் மூணும் சரி.
    கடைசிக்கு என்ன சம்பந்தம்? புரியவில்லை.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. அட கெடுவாய் பல தொழிலுமிருக்கக் கல்வி (தமிழ்)

    அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்

    திடமு³மோ கனமாடக் கழைக் கூத்தாடச்

    செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்

    தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்

    சனியான தமிழைவிட்டு தையலார் தம்

    இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை

    என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே

    ReplyDelete
  5. புலவர்களின் நிலை ரொம்ப பரிதாபம்

    ReplyDelete
  6. கோப்ப்பாஆல்... கோப்ப்பாஆல்னு கன்னடத்துப் பைங்கிளி மாதிரி என் மனைவி என்னைக் கூப்பிடனும்னு நானும்தான் ஆசைப் படுறேன். ஒன்னும் நடக்கலியே. எங்க காலேஜ் பிரின்சிபால் தீர்க்க தரிசி. அப்பவே சரியா சொன்னாரு. நீ பத்து விதமா எதிர்பாத்தா உனக்கு அமையுறது பதினொன்னாவது விதமா இருக்கும்னு. பிரின்சிபல் நாகராஜன் சார்... நீங்க ஜீனியஸ்

    ReplyDelete
  7. புதுப் பதிவுன்னு காட்டிச்சு.எங்க பதிவையும் காணோம்...நிறைய நாளா உங்களையும் காணோம்.சுகம்தானே !

    ReplyDelete
  8. சே.வேங்கடசுப்ரமணியன் சார்...

    //தையலார் தம்
    இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை//

    உண்மை அதுவென்றும் கொள்ளலாம்.
    புலவர்களின் வாழ்க்கை நிலை இன்றாவது ஓரளவு பரவாயில்லை.
    நன்றி சார்.

    ReplyDelete
  9. //கோப்ப்பாஆல்... கோப்ப்பாஆல்னு கன்னடத்துப் பைங்கிளி மாதிரி என் மனைவி என்னைக் கூப்பிடனும்னு நானும்தான் ஆசைப் படுறேன். ஒன்னும் நடக்கலியே.//

    விஜய், இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியலியா?
    நடக்கறதுக்கு ஆசப்பட்டாப் பரவால்ல.
    இதுக்குத்தான் எங்களைமாதிரி வ.இ.வா.- ஆ இருக்கோணும்.

    ReplyDelete
  10. ஹேமா...

    அது ஒரு பெரிய கதைங்க. அதைப் பத்தி தனி பதிவே போடலாம்.
    நான் காணாம போனதுக்கு காரணம்....
    ஆணி பிடுங்க வேண்டிய வேலை அதிகமானது தான்.
    நன்றி.

    ReplyDelete
  11. உங்கள் காதல் வாழியவே

    ReplyDelete