Thursday, 17 June 2010

வளமைத்தமிழ்


பண்டைய தமிழ் எண் வடிவங்கள்...

தமிழ் எண்கள்


* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

இதன் மூலப்பதிவு : தங்கத்தமிழ்

நன்றி : தோழி



தமிழ் எண்வரிசையும்... அளவீட்டு முறைகளும்...

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

இதன் மூலப்பதிவு : தங்கத்தமிழ்

நன்றி : தோழி

11 comments:

  1. //1/2150400 - இம்மி//


    இதை தான் சொலவடையில் இம்மி அளவு கூட தேறாது என்கிறார்களா?

    நல்ல பகிர்வு நன்றி தல!

    ReplyDelete
  2. இதில் நிறையச் சொற்கள் எங்கள் தாத்தா அம்மம்மா போன்ற எங்களூர்ப் பெரியவர்கள் பாவித்துக் கேட்டிருக்கிறேன்.

    //6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)//

    எங்"காதம்" போனாலும் தன் பாவம் தான்னோடு என்பது எவ்வளவு தூரம் போனாலும் நாங்கள் செய்யும்பாவம் எஙக்ளோடு என்பதாகும்.
    இதிலுள்ள "காதம் "இந்த அர்த்தத்தில் வருகிறதோ !

    நகை வேலை செய்பவர்கள் குன்றிமணி,மஞ்சாடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    இதைவிட கையால் அள்ளிப் போடுவதை
    "சிரங்கை"என்பார்களே.

    சரியா கொல்லான் ?

    கனமான வன்மையான தமிழ்தான் எங்கட தமிழ்.

    ReplyDelete
  3. வால்,
    //இம்மி அளவு கூட தேறாது//
    அதேதான்.

    ReplyDelete
  4. ஹேமா,
    இவ்வளவு தூரம் மக்களின் வாழ்வில் ஒன்றி உள்ள மொழி தான் தமிழ்.
    நீங்க சொன்ன மாதிரி ''கனமான வன்மையான தமிழ்தான் எங்கட தமிழ்.''
    நன்றி ஹேமா.

    ReplyDelete
  5. இவ்வளவு அளவீடுகளையும் அந்தக் காலத்துல பயன்படுத்துனாங்கன்னா..... யப்பா? நெனச்சுப்பாக்கவே முடியல. நிச்சயமா அறிவியல், கணிதம் மிகவும் முன்னேறி இருந்திருக்க வேண்டும், அது சம்பந்தமாக ஏதாவ்து தகவல் உண்டா?

    ReplyDelete
  6. ராம்சாமி,
    //நிச்சயமா அறிவியல், கணிதம் மிகவும் முன்னேறி இருந்திருக்க வேண்டும், அது சம்பந்தமாக ஏதாவ்து தகவல் உண்டா?//

    ரொம்ப முன்னேறி இருந்த காலம் அது.
    ராஜராஜன் காலத்துல, ஒரு செண்ட்ல இருபத்திஎத்தயிரத்துல ஒரு பங்க பிரிச்சி, கல் நட்டு நில அளவை பண்ணி இருக்காங்க.
    ம்ம்ம்.

    ReplyDelete
  7. இந்த எழுத்தெல்லாம் நடைமுறையில அழிஞ்சே போச்சே சார்...

    புது விசயங்களை அறிந்துகொண்டேன்..
    நன்றி

    ReplyDelete
  8. பட்டா பட்டி,
    நன்றி.

    ReplyDelete
  9. என்தமிழ் உன்தமிழ் நம்தமிழ்
    அறியத்தந்தமைக்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  10. மலிக்கா,
    //என்தமிழ் உன்தமிழ் நம்தமிழ்
    அறியத்தந்தமைக்கு பாராட்டுகள்..//
    நன்றி.

    ReplyDelete