Tuesday, 11 May, 2010

விருந்தினர் போற்றுதும்


நல்ல வாய்ப்பு.
அருமையான இடம்.நல்ல மனிதரின் அழைப்பு.

இவை யாவும் தவறிப் போய் விடுமோ என்ற அச்சம் மனதில் அதிகமாகிக்கொண்டே இருந்தது. காரணம், நம் ஆப்பீசரின் ''ஊட்டிக்கு வாங்க'' என்ற அன்பான ழைப்பு. செல்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. செல்லும் நேரம் நெருங்க நெருங்க, இங்கே பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஒரு வழியாக எல்லா ஆணியையும் பிடுங்கி விட்டு, பலத்த மழையினூடேஊட்டிக்கு சென்று சே
ரும் போது மணி பத்து.

ஆப்பீசரையும், இன்ன பிற பதிவர்களையும் பார்க்கும் ஆவலில் தங்குமிடம்நுழைந்தால், ஆப்பீசர் பலமாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அத்தனையும் உபயோகமான தகவல்கள். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளது . (உதாரணம் - முட்டையிட்டுபாலூட்டும் விலங்கு ...)

ஆனால் நான் சென்று சேரும் முன்பே பல தகவல் பக்கங்கள் புரட்டப்பட்டிருந்தன
.
ஆப்பீசருடன் இருந்தால், நேரங்கள் மிக சுவையாகக் கழியும் என்பதற்கு ஒருஎடுத்துக்காட்டு...


இரவு நேரம்... யாரென்றே தெரியாத ''ஒருவர்'' நட்ட நாடு ராத்திரியில் குளிர் காய்ந்துகொண்டு இருந்தார் என ஆப்பீசர் சொன்னது. இது வரைக்கும் அது யாரென்றேதெரியவில்லை. பேயாக இருக்குமோ என்ற பயமுறுத்தல் வேறு.
காலையில் நாங்களெல்லாம் சாப்பிட்டு முடிக்கும் வரை குளிர் இருந்தது.

அவலாஞ்சி பயணம் மிக அற்புதமாக இருந்தது. வனங்களின் '' தோற்ற மாற்றம்'' பற்றி ஒவ்வொரு டத்தையும் சுட்டிக்காட்டி கொஞ்சமும் போரடிக்காமல் விளக்கியது சுவையாக இருந்தது.
ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கு
ம் திறமைகளை வெளிக்கொணரும்

அவரின்
பா
ங்கேனி.
''க்கிடிகேட்'' என்ற இடம். (நன்றி - ஆப்பீசரின் நிமோனிக்ஸ்) வாழ்க்கையில் பார்க்க வேண்டிய, ஆனால் எல்லோராலும் பார்க்க இயலாதஇடம். ஆப்பீசர் சிறப்பு அனுமதியின் பேரில் அழைத்துக்கொண்டு சென்றதன்மூலம் வாழ்வின் மிகச் சிறப்பான, சந்தோசமான தருணங்களை ணரவைத்தது.

உணவுக்குப் பின் இளைப்பாறல் காரணமாக நடந்த சிறு போட்டியில், ஆப்பீசர்சந்தோசமாக ''ஆணி பிடுங்கினார்" (அதை போட்டோ எடுக்க தவறி விட்டேன்)

சுருக்
கமாகச் சொன்னால், அனைவரையும் அழைத்துச் சென்று மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து ... இத்தகைய மனம் எல்லோருக்கும் வந்து விடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, திருமதி ஆப்பீசரின் மேற்பார்வையில் தயாரானஉணவு ... மிகச் சுவையானது, அன்பும் கலந்திருந்தது.

கொஞ்சமும் பந்தா இல்லாமல் பழகிய ஆப்பீசரின் புதல்வன் பாலாஜியின்குணம் ... கோடி பெறும்.

தமிழ்மணம் காசி சார், வேங்கடசுப்ரமணியம், அய்யா சீனா அவர்கள், திருப்பூர்சிவா இவர்களுடனான சந்திப்புக்கு வழி செய்து தந்த ஆப்பீசருக்கு சிறப்பு நன்றி.

திருமதி சீனா அவர்களின் மனதை நெகிழ வைக்கும் அனுபவம் ... இன்னும்உள்மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இனிமேல் சுற்றுலா என்று எங்காவது சென்றால், அது ஆப்பீசர் கூடத்தான்இருக்க வேண்டும். ஆப்பீசரின் பார்த்துப் பார்த்து உபசரிக்கும் விதம், ''விருந்தினர் போற்றுதும், விருந்தினர் போற்றுதும்'' என்பதற்கான இலக்கணம் கொண்டது என்பதைசஞ்சய் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் அன்றுதான் நேரில் அனுபவித்தேன்'' அனுபவித் ''தேன்''

ஆப்பீசர்
, மறுபடியும் எப்போ அழைப்பீங்க? ''

லிங்க் :

வந்தாங்க! வந்தாங்க! ஊட்டிக்கு வந்தாங்க!

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.


அவலாஞ்சி - பயண அனுபவம்.

ஊட்டி மலையில் உறவு

13 comments:

 1. தங்கமணி விடுமுறை கழித்து வரமுடியாமல் போனதால் என் பங்கு விட்டு போச்சு, வந்திருந்தேன் மற்ற விலங்குகள் எல்லாம் பயந்திருக்கும்!

  ReplyDelete
 2. அன்பின் கொல்லான்

  இன்பச் சுற்றுலா பற்றிய அழகான இடுகை
  குறுக்கெழுத்துப் போட்டியில் தங்கஈன் தமிழார்வம் தெரிந்தது. போட்டி முடிவினில் இரு குழுவினரும் வென்றதாக அறிவித்தது தங்களின் பெருந்தனமையினைக் காட்டிற்று. இயறகைச் செல்வங்களின் மீதுள்ள ஆர்வம் பிரமிப்பை ஏற்படுத்தியது. பழகும் விதம் - காட்டும் மரியாதை - உள்ளத்தை நெகிழ வைத்தது கொல்லான்.

  நல்வாழ்த்துகல் கொல்லான்
  நட்புடன் சீனா
  9840624293

  ReplyDelete
 3. //இரு குழுவினரும் வென்றதாக அறிவித்தது தங்களின் பெருந்தனமையினைக் காட்டிற்று.//

  அய்யா, எல்லாம் தங்களிடமிருந்து கற்றது தான் .
  நன்றி அய்யா,
  தங்களின் ஆசி என்றும் எனக்கும் தேவை.

  ReplyDelete
 4. கொல்லான்

  இந்த இன்பச் செலவை இனிதாக படம் பிடித்தது போல் பதிந்து விட்டீர்கள் - பணியின் பரபரப்பின் நடுவில் நேரத்தைச் செலவிடுவது என்பது - அதுவும் மனதிற்குப் பிடித்தவாறு இருந்தது என்றால் அமைப்பாளரின் திட்டமிட்ட ஏற்பாடுகள் - உழைப்பு - இவைதான் காரணம்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 5. நல்ல சுற்றுப்பயணம்
  ( கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு )

  ReplyDelete
 6. அருமையான கட்டுரை

  ReplyDelete
 7. வால் பையன்,
  //வந்திருந்தேன் மற்ற விலங்குகள் எல்லாம் பயந்திருக்கும்!//
  ஆனா, நாங்க பயக்க மாட்டோமே.

  ReplyDelete
 8. செல்வி ஷங்கர்,
  துரை
  மிக்க நன்றி.

  ஆப்பீசர்,
  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 9. //ஆப்பீசரின் பார்த்துப் பார்த்து உபசரிக்கும் விதம், ''விருந்தினர் போற்றுதும், விருந்தினர் போற்றுதும்'' என்பதற்கான இலக்கணம் கொண்டது என்பதைசஞ்சய் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் //

  puriyalaiye boss.. avar veetla oru tumbler mor kuduthatha thavira avaroda entha ubasaripu pathiyum enaku neradi anubavam illaiye . nan avar ubasaripu pathi pesi iruka vaaipe illaye.. illa vera ethum arthama?

  ReplyDelete
 10. //illa vera ethum arthama?//
  பாஸ்,
  நீங்க ஊட்டிக்கு வர்றீங்களா என்று கேட்டதுக்கு ''ஆப்பீசர் நல்லா உபசரிப்பார். கவனிப்பு நல்லா இருக்கும்னு'' நீங்க சொன்னீங்க இல்ல? அதத்தான் நான் சொன்னேன்.

  ReplyDelete
 11. ஆமா ஏன் அநியாயத்துக்கு அமைதியா இருந்தீங்க :))

  ReplyDelete
 12. nanum unkalutan next time varuven

  ReplyDelete
 13. சந்தோஷ்,
  நிச்சயம் வாங்க.

  ReplyDelete