Sunday, 25 April, 2010

தொரத்துராங்கப்பா.


வள்ளலார் சொன்ன மாதிரி, 'கடை விரித்தும் கொள்வார் இல்லை' என்றிருந்தேன்.

ஆப்பீசர் ஆரம்பிச்சு வெச்சாங்க.
நம்ம கோபால் தொடர்ராறு.
இதோ அவர் கேள்விகளும், எனது பதில்களும்

1.
அந்த ட்வின்ஸ் இன்னும் காண்ட்டாக்ட்ல இருக்காங்களா? வ்லாசம்? வ்லாசம்?
காண்டக்டுல
இல்ல. ஆனா, அப்பப்ப நான் மட்டும் பாத்துக்கறது உண்டு. (ம்ம் ம்ம் ம்ம் என்ன செய்ய?) என்னாது விலாசமா? கூட்ட கலச்சிராதீங்கப்பா

2.
கொல்லான் சைவம் மட்டும் சாப்பிடுறவரா? ஏன் கேக்குறேன்னா அசைவமா மஜா மல்லிகா எல்லாம் படிச்சிருக்கீங்களே?
ஆமாம்
. உள்ள போற ஐட்டம் மட்டும் தான் நான் சைவம். (எப்படி எல்லாம் யோசிக்கறைங்க?)

3.
வலையுலகத்துல ஒரு
காலத்துலபிரபலமாஇருந்த ஆப்பனும், ஆப்பரசனும் ரொம்ப நாளா காணாமல் போனோர் பட்டியல்ல இருக்காங்களே, அவங்களக் கண்டுபிடிச்சுத் தருவீங்களா?
கண்டுபிடிச்சி
தந்தால் என்னா தருவீங்க? (நான் கேட்டது கிடைக்கும்னா உடனே உடனே கண்டுபிடிச்சி தாரேன்.) அது சரி, உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வரவு செலவு?

4. ஜால்ரா போட்டதுண்டா? உண்டு எனில் யாருக்கு? ஊர், பேர், அத்தனை ட்டீட்டெயிலுடன் பதில் எழுதவும்.
'
சாட்டர்டே
வாட்டர்டே
' - அப்படிம்பாங்க? அது மாதிரி, ஒரு வாட்டர்டே அன்னைக்கு, எட்டு மணி இருக்கும். சேரி, நம்ம ஆப்பீசை பூட்டிட்டு போய் ரிலாக்ஸ் பண்ணலாம்னு கிளம்பி மாடி படி இறங்கிட்டு இருந்தேன். பாதி படியில் , ஒரு ரிலாக்ஸ் பார்ட்டி புல் மப்புல தாறு மாறா கிடந்தது.
தாண்டி போக வகையில்லை. செரின்னுட்டு, அதை கஷ்டப்பட்டு எழுப்பி, ஓரமா உக்கார வெச்சுட்டு, கிளம்பலாம்னு பாத்தா, என்னோட டிரெஸ்ஸ புடிச்சு இழுத்து 'மாபிள்ள, ரெண்டு குவார்டர் அடிச்சும் ஒன்னும் சரி இல்ல. என்ன மண்ணு சரக்கு இது ' அப்படின்னு கேட்டுது. சரி, இது கூட பேசி சரிப்பட்டு வராதுன்னு 'நீங்க சொல்றது சரிதான்' அப்படின்னேன். விட்டுச்சா அது? 'நான் மப்பா மாப்பிள்ள?' அப்படின்னுச்சு. நான் இருந்துட்டு, ' இல்ல, தெளிவாத்தான் இருக்கீங்க' அப்பிடின்னேன். 'கோயம்புத்தூருக்கு எந்த பஸ் போகும்?' அப்படின்னது.
'
நீங்க இருக்கறது கோயம்புத்தூர் தான்' அப்படின்னேன். 'அப்பறம் எப்படி மாப்பிள்ள கோயம்புத்தூருல இருந்து இங்க வந்தேன்?' - எனக்கு தாவு தீந்துடும் போல இருந்தது. எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா, முடியல. 'பஸ் ஏறி வந்தீங்க' - நான். ' மறுபடியும் கோவை போகணும் பஸ் ஏத்தி விடு' - மப்பு கேசு. சரி, கால எடுத்து வை . பஸ் ஏறலாம்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள மறுபடியும் மட்டை ஆகி சான்சிடுச்சு.
இதுல உன்னிப்பா பாத்தா கோபால், ஜால்ரா தெரியும்.

5. ஏழரையக் கூட்டுறதுன்னா என்ன? நீங்க யாருக்காவாது கூட்டிருக்கீங்களா?
நாலு
+ மூனரை. இது வரைக்கும் இல்ல. மே ஏழு, எட்டு அன்னைக்கு கூட்டலாம்னு இருக்கேன்.

அய்யாவுக்கு முதல் மரியாதை.


அய்யா சீனா அவர்கள் கேள்வி கேட்டு உள்ளார்கள்.

அவரின் கேள்விகளுக்கு பதில் நிச்சயம் உண்டு.

இனி அவரின் கேள்வி, எனது பதில்.
hi கொல்லான்
உன் கிட்டே கேள்வி கேக்கணுமா 0- நீ பதில் சொல்வியாக்கும்
எதோ ஒரு நப்பாசைதான் அய்யா.. எல்லா பதிலுக்கும் பொறுப்பு நம்ம ஆப்பீசர் தான். அவர் தான் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தது.

சரி உனக்குப் பொண்னூ பாக்காச் சொல்லி இருக்கிஈ - உனக்கு என்ன 29 வயசு தானே ஆகுது - அதுக்குள்ளே எதுக்கு கல்யாணம் உனக்கு ... ம்ம்ம்ம்
அய்யா
, எனக்கு முப்பத்தி ஒன்பது ஆகுது . எதோ உங்க புண்ணியத்துல எனக்கு ஒரு நல்லது நடந்தா சரி.

கள்
தோன்று ரம் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி - அப்படின்னா அப்பல்லாம் எதக் குடிச்சாங்களாம் ..... ம்ம்ம்ம்ம்

சோம
பானம். சுரா பானம்.

கொல்ல
பெரிசா ஒண்ணும் இல்லையா - அதுவும் இனிமேத்தான் முயற்சி செய்யணுமா - கொல்லான் - பேரே சரியில்லையே ,,,, ம்ம்

தப்புங்க
அய்யா. சொல்ல பெரிசா ஒன்னும் இல்லைன்னு தான் சொல்லி இருக்கேன். பேருல என்னங்க இருக்கு? நல்லபடி நடந்திட்டா போதாதா?

நன்னும்
கியூவிலெ உனக்குமுன்னாடி நின்னு ஆப்பிசருக்கு பதில் சொல்லிட்டேன்னே
நானும் சொல்லிட்டனே?

மே ஏழு எட்டு சந்திப்போம் அய்யா.

Friday, 23 April, 2010

கேட்டாத்தான் கிடைக்கும்


கள் தோன்றி ரம் தோன்றா காலத்தின் முன் தோன்றிய பெருமையுடைய நம் தமிழ்க் குடிக்கு ஒரு பழக்கம் உண்டு. (தெரிஞ்சே தான் 'ள்' போட்டேன். எதிலும் ஒரு கிக் வேணுமில்லையா?)

அதாவது
ஒருவர் செய்யும் செயலை நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம். உதாரணத்துக்கு, ஒருத்தர் உச்சா போறதப் பாத்தா நமக்கும் போகணும் போல தோனுதில்லையா? அது மாதிரி, நம்ம விஜய கோபால்சாமி கேள்வி பதில் போட்டதுல இருந்து எனக்கும் கை, மனசு ரெண்டும் நம நமன்னு ஆகிடுச்சு.

ஆச்சா
? சேரி. கேள்வி பதில எப்படி ஆரம்பிக்கறது? அதுக்கும் நம்ம முன்னோடி கோபால் தான் கை குடுத்தாரு.

இருக்கவே
இருக்கு நம்ம ஆப்பீசர், கோபால் கிட்ட கேட்ட கேள்விகள். அதுல இருந்தே ஆரம்பிச்சிடுவோம்னு ஆரம்பிச்சிட்டேன்.

அய்யா
வருகையாளர்களே, தப்பி தவறி யாராவது இந்த வலைப்பூவுக்கு வந்திட்டீங்கன்னா, ஒன்னு ரெண்டு கேள்விகளாவது கேட்டுட்டுப் போங்க. எனக்கு கேள்வியும், உங்களுக்கு புண்ணியமும் பதிலும் கிடைக்கும்.
(யாருங்க அது 'உனக்கெல்லாம் இது தேவையா?' ன்னு கவுண்டமணி வாய்சில கேக்கறது? உடுங்கப்பா, பதிவுலகத்திலே இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.) ஆரம்பிக்கலாமா?

கேள்வி வெச்சிருக்கரவிங்க எல்லாம் ஆப்பீசர் பின்னாடி வரிசையா சண்டை கட்டாம நில்லுங்க.
(
சட்டம் ஒழுங்கு நம்மனால கெட்டுடுச்சுன்னு ஆயிரக்கூடதில்லையா?)

இனி ஆப்பீசர் கேள்விகளும், ஆப்பீஸ் பாய் பதில்களும்.

அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

அத ஏன் சார் மறுபடியும் ஞாபகப்படுத்த வக்கிறீங்க? நான் முதல்ல சொன்ன மாதிரி உச்சா கூட பாத்தா தான் வரும். ஆனா இதப்பத்தி நினைச்சாலே கழிவறை தேடணும். அதனால நெக்ஸ்ட் கேள்வி என்னன்னு பாப்பமா?

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

உங்களப்பாத்து தான் ஆப்பீசர். சென்சிட்டிவான வேலைல இருந்துக்கிட்டு வாழ்க்கைய எவ்வளவு ஜாலியா வாழ்றீங்க? இருங்க ஆப்பீசர் இருங்க. நானும் இதே குறிக்கோளோட தான் இருக்கேன். எப்படியும் எட்டிடுவேன்.

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
போங்க ஆப்பீசர். வெக்கமா இருக்குது.

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

காலேஜ்
படிக்கிறப்ப எதுக்கால ஊட்டுல ரெண்டு பொண்ணுங்க இருந்தாங்க. அவிங்க ரெட்டைப்பிறவிங்க. அதுல ஒன்ன நான் நூல் வுட்டுட்டு இருந்தேன். அகஸ்மாத்தா ஒரு நா அவிங்க வீட்டுல தண்ணி புடிக்க போறப்ப, நம்ம ஆள் வெளிய வந்துச்சு. அதுகிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசிட்டு இருக்கேன், அதும் பதில் பேசிட்டே இருந்துட்டு, கடேசில தண்ணி புடிச்சு வெச்சிருந்த குடத்த எடுத்து இடுப்பில வெச்சிட்டே சொன்னா பாருங்க. "நா ........ (என் ஆள் பேர் சொல்லி) இல்ல". வழிஞ்சதுக்கு பேர் என்னான்னு நினைக்கிறீங்க?

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

அறியாமல் தின்ற - நடப்பவை, பறப்பவை, நீந்துபவை, ஓடுபவை - இவைகளை ருசிக்காக கொன்று தின்ற குற்ற உணர்வு. (இப்ப இல்லைங்க). எந்த சூழலிலும் உயிர் வதை கூடாது என்பது என் எண்ணம். (கொசு, மூட்டப்பூச்சி இதெல்லாம் கடிச்சா என்ன பண்ணுவே? ன்னு எல்லாம் கேக்கக் கூடாது. தட்டி விட்டுடுவேன்)

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

அந்த தப்பு ஒன்னு தான் இதுவரைக்கும் நா பண்ணாதது. (தியேட்டர பொறுத்த வரைக்கும்)

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
நமக்கு பொதுவா சட்டம்னாலே கொஞ்சம் பயம்தான். சட்டம் தன் கடமைய செய்ய விட்டுடுவேன். அதனாலே மீறல் இல்லே இதுவரைக்கும். இனிமே மீறினா உடனே உங்களுக்கு சொல்லிடறேன். (நோட்டு அடிக்கிறது எல்லாம் வெளிய சொல்ல முடியுமா?) அடுத்தது அடுத்தது.....

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

மெய்யாலுமே அனானி கமென்ட் போட்டது இல்ல. கருத்து சொல்லனும்னா, முகம் காட்டி சொல்லணும். அத விட்டு ...................... இல்லாத ஆளுங்கதான் அனானி கமென்ட் போடுவாங்க.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
சரோஜா தேவி பத்தி நமக்கு அதிகமா தெரியாது. ஆனா மஜா மல்லிகா பத்தி ஓரளவுக்கு தெரியும். அதனாலே ஒப்பிட முடியாதே. (அதென்னவோ தெரியல, மஜா மல்லிகா படிக்கும் போது மட்டும் உங்க நினைப்பு வருது. அது ஏனுங்க ஆப்பீசர்?)

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?

ஐயோ குடுங்க குடுங்க. (ஏற்கெனவே குடுத்திட்டீங்களே ஆப்பீசர்.)
எதோ நெல்லுக்கு பாயறது இந்த புல்லுக்கும் கொஞ்சம் பாயட்டும். விளம்பரம் வேணாம்னு சொல்ல நான் என்ன அறிவாளியா?

இப்பத்திக்கி சுபம்னு போட்டு முடிச்சிக்கிடுவோம்.
ஆனா மறுபடியும் வருவேன்.