Wednesday 29 June, 2011

கூகுளின் தமாசு...





கடந்த வாரம் முதல், கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி தமிழுக்கும் வந்திருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தத்துடன் எனது சமீபத்திய கவிதை(!) ஒன்றை உள்ளிட்டேன்.
மொழிபெயர்ப்புப் பொத்தானைச் சொடுக்கியவுடன் அளவில்லா அதிர்ச்சிதான் கிடைத்தது.
எனது கவிதை(!)யும், கூகிளின் கவிதையையும் கண்டு, படித்து, அளவில்லா ஆனந்தத்தை நீங்களும் அடைக.

மூலம்:

ஞாயிறு போற்றுக... ஞாயிறு போற்றுக...

அன்புடை மக்காள்,
யாவரும் கேளீர்!

என்றேனும் யோசித்ததுண்டா
ஓர் உயிரின்
உயிர் பிரியும் வாதையை?

அநேக ஞாயிறுகளில்
கையில் சிறு பையோடு
உயிர் பிரிந்த உடலை
வெட்டிக் கொண்டுபோகக்
காத்திருக்கும் கூட்டத்தில்
நீங்கள் இருந்ததுண்டா?

சதையை வெட்டி,
எலும்பை ஒதுக்கி,
குருதி ஒட்டிய
பிண்டப் பாதியின்
கடைசி நிமிடங்களை
என்றேனும் உணர்ந்திருக்குமா
அதை சமைத்துத்
தந்த பாத்திரங்கள்?

காலை மெட்டி
உடலைச் சாய்த்து
கழுத்தை அறுக்கையில்
மரண வலி கொண்டு
கூப்பாடிடும்
பாவ ஓலத்தைக்
கேட்டிருக்குமா
குருதி வெளியேற்றிய
கூராயுதம்?

தானும் வெட்டுண்டு
தன்மேல் வெட்டுப்படும்
கூறுகளின்
கையறு நிலையை
சிறு விநாடியேனும்
கருத்தில்
கொண்டிருக்குமா
மர முட்டுகள்?

கொண்டதில் இருந்து
கொடுத்தது போக
மீந்து தெறிக்கும்
சிதறல்களில் உள்ளதே
தனது உடலுக்குள்ளும் உண்டென
என்றேனும் எண்ணியிருக்குமா
கொண்டோடக் காத்திருக்கும்
தெருவோர நாய்கள்?

அந்தி முடிந்ததும்
மீந்ததை
சமைத்து சுவைக்கும்
அந்தக் கறிக்காரனுக்கு
கனவிலேனும் வந்திருக்குமா
வெட்டுப்பட்ட அந்த ஆட்டின்
குட்டியைப்போல்
தனக்கும் ஒரு குட்டி மகன்
வீட்டில் உண்டெனும் சிந்தனை?



மொழிபெயர்ப்பு :

Sunday porruka ... Sunday porruka ...

Maken of love,
Kelir Yavarum!

Yocittatunta as
Of a life
Plague the life of separation?

Most Sundays
With a small bag in his hand
Leaving the body alive
Kontupokak cut
Waiting in the crowd
Does you?

Cut flesh,
For bone,
Associated with blood
Half of pinta
Last minute
Unarntirukkuma as
Camaittut it
Which characters?

Metti morning
Body tilt
Neck in arukkai
The pain of death
Kuppatitum
Pardon olattaik
Kettirukkuma
Blood out
Kurayutam?

Jennifer vettuntu
Tanmel vettuppatum
Components of the
Kaiyaru status
Small vinatiyenum
Has been considered
Wooden props?

From that
Gave the go
Which showed hunger mintu
Scattering in the strange
Untena his utalukkullum
Enniyirukkuma as
Kontota waiting
Street dogs?

After Dusk
Mintatai
Cooked to taste
For the karikkaran
Kanavilenum vantirukkuma
Vettuppatta of the att
If kuttiyaippe
Himself the son of a petty
Untenum idea of ​​home?



இதைவிட ஒரு பெருங்கூத்து...
எனது வலைப்பூவின் தலைப்பை (கொல்லாமை) உள்ளிட்ட போது, வந்த பதில் : Kill...

9 comments:

  1. அது ஒரு சோதனை முயற்சி தான் என்று கூகுள் இனைய தளம் முன்னறிவிப்பு விட்டும் நம் மக்கள் எந்த இளிச்ச வாயண்டா மாட்டுவான் என்று திரிவது வெளிச்சமாகிறது,
    மொழிபெயர்ப்பு சரி அல்ல என்பது உண்மை தான் அதை சரி படுத்த தான் தமிழ் படித்த நாம் இருக்கிறோம், உங்களால் முயன்றதை செய்யுங்கள், இந்த வசதியை மேலும் நல்ல முறையில் செயல்படுத்த ஆவன செய்யுங்கள், நம் தமிழ் இலக்கியம் எங்கோ சென்று விடும்... தமிழ் வாழ இதாவது செய்யுங்களேன்...

    ReplyDelete
  2. சூர்யஜீவா...
    நண்பரே, கூகுளின் முயற்சியைக் குறைசொல்லுவதற்க்காக இது எழுதப் படவில்லை. நீங்கள் சொல்வது போல் இது ஒரு சோதனை முயற்சி என்றாலும், அதன் செயல்பாட்டு முறையின் அடிப்படை கட்டமைப்பு கூட இல்லையே.
    இவ்வளவு பெரிய ஒரு வலை நிறுவனம், இந்த மாதிரி 'சின்னப் பசங்க வெள்ளாமை' மாதிரி கொண்டு வந்திருப்பதைத் தான் குறை சொல்கிறேன்.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. முதல் முயற்சிதானே நண்பா இன்னும் பண்படுத்தப்பட்டால் பெரும் பயனளிப்பதாக இருக்கும் என்பது உண்மைதான்.
    :)

    ReplyDelete
  4. என் ப்ளாகை ட்ரான்ஸ்லேட் பண்ணிப் படிச்சுப் பாருங்கன்னு இங்க இருந்த தெலுங்கர்களிடம் லிங்க் கொடுத்து ட்ரான்ஸ்லேஷன் சைட்ல போட்டுக் காட்டினேன். காறித் துப்பாத குறையா எச்சரிச்சு அனுப்புனாங்க. நம்ம என்ன எழுதுனோமோ அதை நாமளே இங்கிலீஷ்ல நல்லா ட்ரான்ஸ்லேட் பண்ணித் தான் இதை டெவலப் பண்ணி கொண்டு வரனும் போல இருக்கு.!

    ReplyDelete
  5. Kill....எப்பிடி இருக்கீங்க.சுகம்தானே.கவிதையை மிகவும் ரசித்தேன்.மொழிபெயர்ப்பு....!

    ReplyDelete
  6. தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்து பார்க்காதீர்கள்.. இப்போது தானே ஆரம்பித்திருக்கிறார்கள்.. கொஞ்ச நாள் ஆகட்டும்..

    ReplyDelete
  7. it is an automatic system. more and more we translate it will get more and more improved. so try to translate simple lines and help google to improve it.

    ReplyDelete
  8. ஆரம்பம் தானே, அத்துடன் இன்றைய கவிதைகளை
    மொழி பெயர்பதென்பது இலகுவல்ல.
    இன்றைய பல கவிதைகளை, தமிழ் வாசிக்கத் தெரிந்தோராலேயே புரிய முடிவதில்லை. கூளிள் பாவம்....
    பிரஞ்சு ஆங்கில மொழிபெயர்ப்பிலும் சில தவறுகள்
    வந்தது.
    நல்ல மாற்றம் வரும் என நம்புவோம்.

    ReplyDelete
  9. எங்கே காணோம் !

    ReplyDelete