Sunday, 8 August 2010
தனி மரம்
நேற்றோர் கனாக் கண்டேன்.
நீரும் சதையும் போல
நெடிதுயர்ந்து நின்று,
பின் வீழ்ந்த ஒரு மரம்
பேசிற்று என்னிடம்
என் வேர் கொண்டு
நீர் குடித்து
நெடிதுயர்ந்து நின்று
நிழல் தந்தேனே
கூடவே
நான் அருந்தும் நீரை
மழையாய்த் தந்தேன்.
நீளும் நெடும் பகலில்
என்னை நினைத்தீரே!
ஓர் வெம்மையற்ற காலத்தில்
என்னை வெட்ட
முன் நின்றீரே?
கொலையோ உமது தொழில்?
கொற்றவன் வடிவில் நீயுமா?
கொன்று முடித்து
வாகனம் அழைத்து
என்னை அழைத்து
ஏற்றுகையில்
உமக்கு தோன்றியிருக்குமா
உன் பிள்ளை
சோறு சாப்பிட
என் கிளையில் வாழும்
பறவையின் உருவம் காண்பித்ததை?
என்றேனும் உன்
குடும்பம்
கலைத்ததுண்டா நான்?
என்றும் உன் வேர்வைக்கு
விசிறியாக
வேண்டும் நான்.
இன்று
உன் சாலைப் பயணத்திற்கு
தடையோ நான்?
நான்
உன் தாய் !
இன்று நீ
எழுதுகின்றாயே
மேசைப் பலகை,
அதுவும் நான்.
நேற்றொரு
காதல் கடிதம் வந்ததே ,
அதன் தாளும் என் உறவு.
நினைப்பாயோ நீ?
நீ சிறு வயதில்
வேப்பிலை அடிக்கப்பட்டு
பூரண குணமாக்கப் பட்டதை ?
நீ என் சேய்.
நீ என் அடி மரம் உலுக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சம்
நிறைவுறும்
இன்னொரு முறை
என்
அடி வேரை
அறுக்காதே.
தனி மரம்
Subscribe to:
Post Comments (Atom)
தாய் சேய் என்று சொல்லிச் சொல்லியே அறுத்துக்கொண்டிருக்கிறோம்.தவிர்க்க முடியாததாயும் உள்ளது.நாகரீகமும்
ReplyDeleteவிஞ்ஞானமும் கடந்துகொண்டிருக்கிறது இயற்கையை.
சார் கவிதை ரொம்ப அருமை சார்! ஒரு மரத்தின் உணர்வுகளை மிகவும் உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்!
ReplyDeleteசார் உங்களின் இந்த கவிதை என் சிறு வயதை ஞாபகப்படுத்துகிறது!
ReplyDeleteஎன் சிறு வயதில் ஒரு மரத்திடம் ஆசையோடு இருந்தேன். ஆனால் அதை கொஞ்ச காலத்தில் வெட்டி விட்டார்கள். அப்போது ஏனோ எனக்கு மனசு வலித்தது!
ReplyDeleteஎன் சிறு வயதில் ஒரு மரத்திடம் ஆசையோடு இருந்தேன். ஆனால் அதை கொஞ்ச காலத்தில் வெட்டி விட்டார்கள். அப்போது ஏனோ எனக்கு மனசு வலித்தது!
ReplyDeleteஹேமா,
ReplyDeleteதாய் சேய் உறவுகளே இன்று அறுத்துக் கொள்ளும் நிலையில் தானே உள்ளது?
எஸ். கே. ,
ReplyDeleteமரமென்பதும் ஒரு உணர்வுள்ளது தானே?
உண்மைதான் சார். சிறு வயதில் மரத்தோடு பேசி அதோடு விளையாடி இருக்கிறேன். அதை என் நண்பனாக நினைத்திருக்கிறேன். ஆனால் அதை கொஞ்ச காலத்தில் வெட்டி விட்டார்கள். அப்போது ஏனோ எனக்கு மனசு வலித்தது!
ReplyDeleteநான் ஒரு கோழிக் குஞ்சை வளர்த்தேன் மிகவும் ஆசையாக. ஒரு நாள் அது இறந்த விட்டது. அன்று முழுவதும் நான் அழுதுகொண்டே இருந்தேன் சாப்பிடக் கூட இல்லை.
நிறைய பேருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும். ஆனால் பெரியவர்களான பிறகு ஏனோ அப்படிப்பட்ட உணர்வுகள் மறைந்து விடுகின்றன அல்லது வெளிக்காட்ட முடிவதில்லை.
சிறு வயதில் நம்மிடம் இருக்கும் மனிதத் தன்மை நாம் பெரியவர்களாக மாறும்போது சிறிது சிறிதாக குறைகிறது.
மற்ற உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்பவர்கள் மிகக் குறைவே.
சிறுவயது நினைவுகள் தோன்றுகின்றன..
ReplyDeleteதற்போது மரத்தடியில் நிற்கக் கூட நேரமில்லாது வாழ்க்கை செல்கிறது..
கருத்துள்ள பதிவு.
(வந்துவிட்டேன் நண்பரே..
சூரியன் கோபிக்காதே..)
சார்.. நான் அப்பால வரேன்...
ReplyDeleteநன்றி இந்திரா.
ReplyDelete(சூரியன் என்னைக்கும் கோபிக்காது)
வாங்க பட்டா சார்.
ReplyDeleteபட்டா பிளாக்ல தில்லுருந்தா என் கடைபக்கம் வாங்கனு போட்ரிந்ததை பாத்தி தில்லா வந்தா.... கவுஜ எழுதுர கோஷ்டியா....மீ த எஸ்கேப்....
ReplyDeleteஜெய், அப்படி எல்லாம் எஸ்கேப் ஆக விட்டுருவோமா?
ReplyDelete