Sunday 25 April, 2010

தொரத்துராங்கப்பா.


வள்ளலார் சொன்ன மாதிரி, 'கடை விரித்தும் கொள்வார் இல்லை' என்றிருந்தேன்.

ஆப்பீசர் ஆரம்பிச்சு வெச்சாங்க.
நம்ம கோபால் தொடர்ராறு.
இதோ அவர் கேள்விகளும், எனது பதில்களும்

1.
அந்த ட்வின்ஸ் இன்னும் காண்ட்டாக்ட்ல இருக்காங்களா? வ்லாசம்? வ்லாசம்?
காண்டக்டுல
இல்ல. ஆனா, அப்பப்ப நான் மட்டும் பாத்துக்கறது உண்டு. (ம்ம் ம்ம் ம்ம் என்ன செய்ய?) என்னாது விலாசமா? கூட்ட கலச்சிராதீங்கப்பா

2.
கொல்லான் சைவம் மட்டும் சாப்பிடுறவரா? ஏன் கேக்குறேன்னா அசைவமா மஜா மல்லிகா எல்லாம் படிச்சிருக்கீங்களே?
ஆமாம்
. உள்ள போற ஐட்டம் மட்டும் தான் நான் சைவம். (எப்படி எல்லாம் யோசிக்கறைங்க?)

3.
வலையுலகத்துல ஒரு
காலத்துலபிரபலமாஇருந்த ஆப்பனும், ஆப்பரசனும் ரொம்ப நாளா காணாமல் போனோர் பட்டியல்ல இருக்காங்களே, அவங்களக் கண்டுபிடிச்சுத் தருவீங்களா?
கண்டுபிடிச்சி
தந்தால் என்னா தருவீங்க? (நான் கேட்டது கிடைக்கும்னா உடனே உடனே கண்டுபிடிச்சி தாரேன்.) அது சரி, உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வரவு செலவு?

4. ஜால்ரா போட்டதுண்டா? உண்டு எனில் யாருக்கு? ஊர், பேர், அத்தனை ட்டீட்டெயிலுடன் பதில் எழுதவும்.
'
சாட்டர்டே
வாட்டர்டே
' - அப்படிம்பாங்க? அது மாதிரி, ஒரு வாட்டர்டே அன்னைக்கு, எட்டு மணி இருக்கும். சேரி, நம்ம ஆப்பீசை பூட்டிட்டு போய் ரிலாக்ஸ் பண்ணலாம்னு கிளம்பி மாடி படி இறங்கிட்டு இருந்தேன். பாதி படியில் , ஒரு ரிலாக்ஸ் பார்ட்டி புல் மப்புல தாறு மாறா கிடந்தது.
தாண்டி போக வகையில்லை. செரின்னுட்டு, அதை கஷ்டப்பட்டு எழுப்பி, ஓரமா உக்கார வெச்சுட்டு, கிளம்பலாம்னு பாத்தா, என்னோட டிரெஸ்ஸ புடிச்சு இழுத்து 'மாபிள்ள, ரெண்டு குவார்டர் அடிச்சும் ஒன்னும் சரி இல்ல. என்ன மண்ணு சரக்கு இது ' அப்படின்னு கேட்டுது. சரி, இது கூட பேசி சரிப்பட்டு வராதுன்னு 'நீங்க சொல்றது சரிதான்' அப்படின்னேன். விட்டுச்சா அது? 'நான் மப்பா மாப்பிள்ள?' அப்படின்னுச்சு. நான் இருந்துட்டு, ' இல்ல, தெளிவாத்தான் இருக்கீங்க' அப்பிடின்னேன். 'கோயம்புத்தூருக்கு எந்த பஸ் போகும்?' அப்படின்னது.
'
நீங்க இருக்கறது கோயம்புத்தூர் தான்' அப்படின்னேன். 'அப்பறம் எப்படி மாப்பிள்ள கோயம்புத்தூருல இருந்து இங்க வந்தேன்?' - எனக்கு தாவு தீந்துடும் போல இருந்தது. எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா, முடியல. 'பஸ் ஏறி வந்தீங்க' - நான். ' மறுபடியும் கோவை போகணும் பஸ் ஏத்தி விடு' - மப்பு கேசு. சரி, கால எடுத்து வை . பஸ் ஏறலாம்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள மறுபடியும் மட்டை ஆகி சான்சிடுச்சு.
இதுல உன்னிப்பா பாத்தா கோபால், ஜால்ரா தெரியும்.

5. ஏழரையக் கூட்டுறதுன்னா என்ன? நீங்க யாருக்காவாது கூட்டிருக்கீங்களா?
நாலு
+ மூனரை. இது வரைக்கும் இல்ல. மே ஏழு, எட்டு அன்னைக்கு கூட்டலாம்னு இருக்கேன்.

4 comments:

  1. மூணு நாலரை - ஏழு எட்டு - எட்டு ஒம்பொதுதான் சரின்னு நினைக்கிறேன் - ஆமா ஜால்ரா சத்தம் காதப் பொளக்குதே - ம்ம்ம்ம்ம் = நல்வாழ்த்துகள் கொல்லான் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நல்லா கூட்டுறீங்கய்யா ஏழரைய. ஆனா கடைசி வரைக்கு வ்லாசம் கொடுக்காம கழட்டிவிட்டது மட்டும் நல்லா இல்லை சொல்லிட்டேன்.

    மப்பு மன்னாருகளுக்கு ஜால்ரா அடிச்ச அனுபவம் எனக்கும் இருக்கு. கொஞ்சம் அவஸ்தைதான். எஸ்கேப் ஆனீங்களா இல்லையா?

    ஆப்பு பிரதர்ஸோட எனக்குத் தனிச்சு வரவு செலவு ஒன்னும் இல்லை, அவுங்க ரெண்டு பேரு பேரையும் கேட்டா உங்களுக்கு பேதியாகுதா, வகுத்தால போகுதான்னு பாத்தேன். சகஜமாத்தான் இருக்கீங்க. இதனால் அறியவரும் நீதி, நான் தேடுற ஆள் நீங்க இல்லை.

    எப்படி இப்புடி? உள்ள போற ஐட்டங்கள் மட்டும் சைவம்னு சொல்றீங்க. சரக்க எப்ப சைவத்துல சேத்தாங்க?

    [மாமா மாதிரி தனிப் பதிவுல பதில் கேள்வி எழுத முடியலைன்னாலும் ஏதோ என் பங்குக்குப் பின்னூட்டத்துல எழுதிருக்கேன்.]

    ReplyDelete
  3. ஐயா,
    ஆமாங்கய்யா. எட்டு, ஒம்போது தான் சரி.

    ReplyDelete
  4. கோபால்,
    உங்க பேர எழுதும்போதே, சரோஜாதேவி வாய்சில சொல்ற 'கோப்பால்' தான் நினைவுக்கு வருது.
    எனக்கென்னவோ, ஆப்பு ப்ரதர்சில ஒரு ப்ரதர் நீங்கதான்னு சந்தேகமா இருக்கு.
    சரக்கு சைவம் தான். நேர்ல பேசி தீத்துக்குவோம்.

    ReplyDelete