Thursday 9 June, 2011

எரியும் நினைவுகள்...

1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்பரின் முயற்சியால் சிறு அளவில் ஆரம்பிக்கப்பட்டது தான் பின்னாளில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் ...
1981ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி இரவு ஒன்பது மணியளவில்
97, 000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களோடும், சுவடிகளோடும் எரிக்கப்பட்டு சாம்பலாகி இந்த ஆண்டோடு மூன்று தசங்களாகின்றன.

அந்த நம் மொழி நூலை தன்னுள் கொண்டிருந்த யாழ் நூலகத்தின் அன்றைய தோற்றமும், நெருப்புக்குள் புகுந்து மீண்ட பின்னான தோற்றமும்...


''ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தின் புத்தகங்களைக் கொளுத்துங்கள்'' என்பார்கள்.
ஆனால் அந்த இனமும், அந்த இனத்தின் புத்தகங்களும் - கொளுத்திய தீவிரவாதக் கைகளை மன்னிக்காது.
படங்கள் நன்றி : http://nerudal.com/

2 comments:

  1. கொல்லான் சுகமா.என்ன இருந்தாப்போல திடீர்ன்னு ஒரு பதிவு !

    செய்றது எல்லாம் செய்திட்டு அழகா கோட் சூட் போட்டுக்கிட்டு ஐநாவில இவ்ளோ ஆதாரங்களோட, அத்தனை பேருக்கு முன்னால நாங்க எதுவுமே பண்ணலன்னு சொல்றாங்களே !

    ReplyDelete
  2. கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களும் அரிய சுவடிகளும் அழிந்து போனது. என் கையிருப்பிலுள்ள புத்தகங்களில் அட்டை கிழிந்தாலே மனசு தாங்காது. இந்த செய்தியை கவிக்கோ அப்துல் ரஹ்மான் எழுதிய தொடர் வாயிலாக அறிந்தேன். அன்று முழுவதும் சோறு செல்லவில்லை.

    ReplyDelete