Tuesday 16 February, 2010

வாழைக்காய் பஜ்ஜியும், மசால் வடையும்


இந்த சனியன் மனசுக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது. கழுதை. எதை நினைச்சாலும் அதை அப்பவே வேணும்கிற அடசல் புத்தி.

அதாவதுங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி ஆசை இருக்கும்.
அது மாதிரி எனக்கு திங்கரதிலே ரொம்ப ஆர்வம்.

எனக்கு எப்போமே எதுவுமே கொஞ்சம் தூக்கலா இருக்கோணும்.
உதாரணத்துக்கு, காப்பீல சக்கரை சாஸ்தியா - கொழம்புல காரம் தூக்கலா - தயிர் சொத்துல உப்பு அதிகமா - தோசைல எண்ணை ஓவரா ( இப்படி எல்லாம் தின்னா கொழுப்பு நெம்ப சேராதான்னு கேக்க கூடாது.)
பணங்காசு ரொம்ப சேந்து வந்தா இப்படி எல்லாம் கேப்பீங்களா?

பஜ்ஜி பத்தி "பஜ்ஜி சாஸ்திரம்" னு ஒரு கட்டுரைல பாக்கியம் ராமசாமி சொல்லி இருப்பார்.
அப்படி ஒரு நா எனக்கும் பஜ்ஜி சாப்பிட ஆசை வந்துச்சு.

இப்படி எல்லாம் சாப்டாதே நண்பா, சாப்டீன்னா காட்டிலாக்கா அதிகாரி (ஆப்பீசர், கோச்சுக்காதீங்க) மாதிரி ஆகிடுவே அப்பிடின்னான் ஒரு உதவாக்கரை. (பஜ்ஜியும், வடையும் ரசிச்சு ருசிச்சு சாப்ட்டு பாத்தவங்களுக்கு தெரியும் அதோட ருசியான அருமை)
கடைக்கு போனேன்.

சூடா மொளகா பஜ்ஜியும், வாழக்கா பஜ்ஜியும் போட்டு அப்பத்தான் தட்டுல வச்சிருந்தான்.

"ரெண்டு பஜ்ஜி " சொல்லி உடனே வந்துச்சு.
ஆசையா சாப்பிடுட்டு இருந்தப்ப அடுத்ததா மசால் வடையை கொண்டு வந்து ரேக்குல போட்டான்.

ஆசை யாரை விட்டுது?

" ரெண்டு மசால் வடை பார்சல்!"

படம் நன்றி : https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOAd-lWMRkikIRfz_Siff0SUB2rqnKK990mvzAHUuiBbHsC9neJi6LXxxlAPfZ48yYEb7Re_H3uM2dL-Oh5CQQXJ86uSNMBamuBE0qOYilqnIB2n1sCpHqgYf-YYoM7hAwrfvrkZymfmG/s1600/pajji.ஜபக்

-------------------------------------------------------------------------------------------------------

4 comments:

  1. எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால்அவர் பெயரை அனாவசியமா ஏன் இழுத்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
  2. நன்றி அருவி!
    ஒரு வெளம்பரம்....

    ReplyDelete
  3. பஜ்ஜி - ம்ம் - சாப்பிடலாமே -

    //இந்த சனியன் மனசுக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது. கழுதை. எதை நினைச்சாலும் அதை அப்பவே வேணும்கிற அடசல் புத்தி.//

    நினப்பதெல்லாம் உடனே அடைய நல்வாழ்த்துகள் - ஒண்னு ரெண்டு தவிர

    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அய்யா,
    அதெதுக்குங்க ஒன்னு ரெண்டு மட்டும் விட்டுட்டு?

    ReplyDelete