Friday 25 December, 2009

புலால் மறுத்தல்




தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
அதிகாரம் 26. குறள் 251

Thursday 24 December, 2009

பதினொன்றாம் திருமுறை



சிவபெருமான் இயற்றிய பதினொன்றாம் திருமுறை பதிகம்

"மதிமலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு

ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"

இதை இயற்றியது திருவாலவாயுடையார் என்னும் நாமம் தாங்கிய சிவபெருமான்.

பாடலைப் படித்து பொருள் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

பாடல் மற்றும் பாடியவர் பற்றிய மேலும் சுவையான விபரங்கள் அடுத்த பதிவில்...

Tuesday 22 December, 2009

இருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்!

கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து
கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை,
உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை
உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும்
அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித
வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் மனிதன் பெரு முயற்சிகளை
மேற்கொள்கிறான்.

ஒரு நாட்டின் கலை, இலக்கிய, அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக
வெளிக்கொணர வேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள்
எளிதில் பயன்கொள்ளக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு
அமைப்புகள், தனியார் என்று பலதிறப்பட்டோரும் தாம் விழையும் வண்ணம் ஆய்வுகளை
மேற்கொள்ளவும், அவ்வாய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை வரையவும் வாய்ப்பு
ஏற்படுத்தித் தரவேண்டும்.

ஒருமுறை எழுதப்பட்டவுடன் வரலாறு எழுதும் பணி

மேலும் படிக்க ...
http://groups.google.ro/group/mintamil/msg/0eaa14f8e7cac954

Wednesday 25 November, 2009

பொருள்

ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 29, 2009

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.

கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.

‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’

பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’

‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’

‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’

‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில சாக்லெட் விக்கறதில்லை’

எனக்கு ஆச்சர்யம். இந்தப் பாரதப் புனித பூமியில் சாக்லெட் விற்காத கடைகளும் உண்டா?

என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர் சிரித்தபடி சொன்னார், ‘உங்களைமாதிரிதான் சார், சில்லறை இல்லாத எல்லோரும் தேவையே இல்லாம சாக்லெட் வாங்கிட்டுப் போறாங்க, அவங்களா விரும்பி வாங்கினாக்கூடப் பரவாயில்லை, Impromptu buying, அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, அதைத் தின்னு பல் கெடும், உடம்பு குண்டாகும், எதுக்கு? நம்ம கடைக்கு வர்றவங்க ஏதாச்சும் பயனுள்ள பொருள்களைதான் வாங்கணும்-ங்கறது என் பாலிஸி’, நங்கையின் கன்னத்தைத் தட்டினார், ‘என்னம்மா? பென்சில் வாங்கிக்கறியா? எரேஸர், ஷார்ப்னர் எதுனா தரட்டுமா?’

’மூணுமே கொடுங்க’

அவர் சிரித்தபடி இரண்டு கறுப்புப் பென்சில்களைமட்டும் எடுத்துக் கொடுத்தார், ‘நாலு ரூபாய் ஆச்சு சார், நன்றி!’

இப்போது நடந்ததை ப்ளாகில் எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள், நான் சும்மா ‘Feel Good’ கற்பனைக் கதை எழுதுகிறேன் என்றுதான் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டே படிகளில் இறங்கிவந்தேன். நங்கை பென்சிலை இறுகப் பற்றிக்கொண்டு புதிய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

அவளைக் கொஞ்சம் திசை மாற்றுவதற்காக, ’ஏதாவது விளையாடலாமா?’ என்றேன்.

‘ஓ, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ஒரு சைன்ஸ் கேம் சொல்லிக்கொடுத்தாங்களே’

‘என்னது?’

‘Solid Vs Liquid’

‘அப்டீன்னா?’

‘நான் ஒரு பொருள் பேர் சொல்வேன், அது Solid-ஆ, அல்லது Liquid-ஆ-ன்னு நீ சொல்லணும்’

‘ஓகே’, வழியெல்லாம் பதில் தேவைப்படாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நடப்பதற்கு இந்த அற்ப விளையாட்டு எவ்வளவோ பரவாயில்லை.

நங்கை தன் கையில் இருந்த பழத்தைக் காண்பித்துத் தொடங்கினாள், ‘வாழைப்பழம்?’

‘Solid’

’ஜூஸ்?’

‘Liquid’

எங்களை ஒரு சைக்கிள் கடந்துபோனது, அதைச் சுட்டிக் காட்டி, ’சைக்கிள்?’

‘Solid’

கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’

இதற்கு என்ன பதில் சொல்வது? உள்ளே ஏதுமற்ற பள்ளம் Solid-ஆ, Liquid-ஆ? பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

***

என். சொக்கன் …

29 09 2009

http://nchokkan.wordpress.com/

Sunday 15 November, 2009

கண்டுபிடி


இது எந்த எடம்முன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.

ஜீவகாருண்யம்

ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல...

மேலும் அறிய சொடுக்கவும்...

http://velmahesh.blogspot.com/2009/10/blog-post_12.html

Monday 2 November, 2009

புண்ணியம் தேடி... (காசிக்கு எல்லாம் போக வேண்டாம்)

அன்பர்களே!
உங்கள் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரம் நடுங்கள்.
அப்படி செய்தால் ஒவ்வொரு மனிதனின் ஆயுள் காலத்தில் சுமார் ஐம்பது முதல் என்பது மரங்கள் இந்த மண்ணில் நடப்பட்டு விடும்.
மரம் இல்லாத இடங்களில் மரங்கள் நடுங்கள்.

Sunday 1 November, 2009

இன்று நேற்றல்ல ...

கொல்லாமை என்பது பழங்கால தமிழ் இலக்கியங்களில் அறமாக கருதப்பட்டிருக்கிறது. பழங்கால தமிழர்கள்- திராவிடர்கள் சைவ உணவுகளைத்தான் உட்கொண்டனர், இடைக்காலத்தில் ...

மேலும் படிக்க ... சொடுக்கவும்!
http://www.vallalarspace.com/Kumaresan/Articles/2684

Saturday 31 October, 2009

ஓசின்னாலும் யோசி!

வந்தனமுங்க!

அய்யா சாமிகளா!
கும்பிடறனுங்க
எல்லாரும் சுகமா இருக்கீங்களா?

இந்த மழைக்காலத்துல புதுசா வந்து இருக்கேனுங்க சாமி!

நமக்கு பொழப்புன்னு ஒன்னு இருந்தாலும் ஊர் சுத்தறதுல கொள்ளை இஷ்டம் சாமியோ!

அதனால நம்ம தளத்துல சுத்துன இடங்களை அப்பப்ப குடுக்கலாம்னு இருக்கேன் சாமி.

மூச்சு வாங்குது சாமி!

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வர்றேன்.

அப்ப உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?