ஊழல் நிறைந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்பது மனித நாகரீகம் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து கொண்டிருப்பது தான்!, எல்லாம் தெரிந்துமே இந்தியா ஊழலில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது, இதை சொல்வது சர்வதேச புள்ளிவிபரம்! அவர்களுக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருப்பது எத்தனை, கால ஓட்டத்தில் மறைந்தது, அதை நாம் மறந்தது எத்தனை! சரி நமக்கு தெரிந்தே இத்தனை என்றால் நமக்கு தெரியாமல் எத்தனை இருக்கும்! ஆக ஊழலில் இந்தியாவின் இடம் டாப்பில் இருப்பது கண்கூடாக தெரிகிறது!
இதெற்கெல்லாம் யார் காரணம்!?, இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே, ”மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்கு லஞ்சம், நம் நாட்டில் மட்டும் தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்”, பத்து, இருபது வாங்குபவனால் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு வந்துவிடுமா என்றால் இல்லை, அவைகள் உணவக டிப்ஸ் போல் ஆகிவிட்டது, ஆனால் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவில் களவாடப்படுகிறது, கூடவே நம் உரிமைகளும்.
சினிமாவில் ஹீரோ சாகசம் செய்தால் விசில் அடித்து கைத்தட்டுவோம், உண்மையில் அதே போன்ற துணிச்சலான செயலை ஒருவன் செய்தால், ”பாவம் பிழைக்கத்தெரியாதவன்.” உண்மையில் இம்மாதிரி பிழைக்க தகுதியில்லாத, கையாலாகாத, அதிகாரமையத்தை எதிர்க்கத்தெரியாத பொதுமக்களால் பல பல நேர்மையான அதிகாரிகள் தங்கள் பணியை விட்டே விலகி சென்றிருக்கிறார்கள்!, உங்களைப் போய் எதாவது சாகசம் செய்ய சொன்னார்களா? ஒருவன் அதிகாரமையத்திற்கு எதிராக போராடுகிறான், உனது ஆதரவு கரத்தையாவது நீட்டலாமே!
நூத்துக்கு முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று ”ஆத்தா நானும் பாஸாகிட்டேன்” என்று எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சொல்ல முடியாது! அத்தனையும் உழைப்பு, அவர்களது நோக்கமும் மக்களுக்கு தொண்டாட்றுவது, ஆனால் அதிகாரமையத்தில் அமர்ந்தவுடன் தனக்கும் அதே புத்தி வந்து எத்த்னையோ அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு தங்களது கடமையை மறக்கிறார்கள், அவர்களுக்கு மத்தியில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள், தன்ன்னால் கண்டுபிடிக்கபட்ட ஊழல் காரணமாக தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!
அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள், அவரது நேர்மையை அவமான படுத்தியிருக்கிறார்கள் காரணம், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, உமாசங்கர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும்! அவர் கண்டுபிடித்த ஊழல்கள் அனைத்தும் உடனே விசாரிக்கப்பட வேண்டும்!, இவைகளை மறுக்கும் தமிழக அரசிற்கு எனது கண்டணங்களை தெரிவித்து கொள்கிறேன்!
உமாசங்கர் பற்றி முழுமையாக அறிய