
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
அதிகாரம் 26. குறள் 251
எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும்
அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித
வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் மனிதன் பெரு முயற்சிகளை
மேற்கொள்கிறான்.
ஒரு நாட்டின் கலை, இலக்கிய, அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக
வெளிக்கொணர வேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள்
எளிதில் பயன்கொள்ளக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு
அமைப்புகள், தனியார் என்று பலதிறப்பட்டோரும் தாம் விழையும் வண்ணம் ஆய்வுகளை
மேற்கொள்ளவும், அவ்வாய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை வரையவும் வாய்ப்பு
ஏற்படுத்தித் தரவேண்டும்.